இலங்கை வரும் இந்தியப் பிரதமரை இலங்கையின் தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் சந்தித்துக் கலந்துரையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை கொழும்புக்கு வருகை தந்து 6 ஆம் திகதி காலை இந்தியா திரும்புகின்றார்.
இதன்போது அவரைச் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் கோரி பல தமிழ்த் தரப்புக்களும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தை நாடியுள்ளனர்.
இதற்கமைய தமிழர் தரப்பில் 7 பிரதிநிதிகள், மோடியைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் 4 பேரும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) சார்பில் ஒருவரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி் சார்பில் இருவருமாக இந்த 7 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.