வர்த்தக செய்தி – CEYLON GREEN LIFE PLANTATION தனியார் முதலீட்டு கம்பனியின் 34 வது கிளை கல்முனை மாநகரில்
_பிரபா –
CEYLON GREEN LIFE PLANTATION தனியார் முதலீட்டு கம்பனியின் பிராந்திய காரியாலயம் கல்முனையில் மாநகரில் 26.03.2025 ஆம்திகதி திறந்து வைக்கப்பட்டது.
மும்மதங்களையும் சார்ந்த மதத் தலைவர்களின் ஆசியோடு,கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு A. அமலதாசன், நிறுவனத்தின் வடக்கு கிழக்கு உதவி பொது முகாமையாளர்,M. ஆனந்தராஜன், மற்றும் கிழக்கு பிராந்திய வலய முகாமையாளர் S. ஜசீகரன் ஆகியோர் இணைந்து இந்நிறுவனத்தின் காரியாலயத்தை திறந்து வைத்தனர்.
இந்நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நிதியை கொண்டு
அப்பிள் மற்றும் கொய்யா, போன்றவற்றை பிரதான பயிரினங்களாகவும் ஏனைய மரக்கறி வகைகளையும் பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கின்ற உற்பத்திகளை கொண்டு உள்ளூர் சந்தைகளுக்கும், மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் ஊடாக கிடைக்கும் இலாபத்தினை பகிர்ந்தளிக்கும் விதமான செயற்பாடுகளைக் கொண்டு எமது நாட்டிற்கு பசுமையையும், அபிவிருத்தியையும் கொடுப்பதே நிறுவனத்தின் நோக்கமாகும்.
சிலோன் கிரீன் லைஃப் பிளான்டேஷன் நிறுவனத்தின் கல்முனை பிராந்திய காரியாலயமானது கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் பாண்டிருப்பு தாளட்டுவான் சந்தியில் கிழக்கு பக்கமாக உள்ள super market மேல்தளத்தில் அமைந்துள்ளது.
கல்முனை பிராந்திய காரியாலயத்தின் முகாமையாளர்களாக திரு. K. விஸ்வநாதன், திரு .M. மதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே நிதி முதலீட்டாளர்கள் அனைவரையும் இந்நிறுவனத்தில் முதலீடுகளை செய்து பல்வேறு அனுகூலங்களை பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கின்றனர் CEYLON GREEN LIFE PLANTATION (PVT) LTD. நிறுவனத்தினர்.



























