சாமர சம்பத் எம்.பி. கைது!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இன்று காலை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.