( வி.ரி.சகாதேவராஜா)

 எதிர்வரும்  உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் , காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் 14 பேர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர் .

வேட்புமனுவில் பிரதான வேட்பாளர்களாக, முன்னாள் தவிசாளர்களான  கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்,  யோகரெத்தினம் கோபிகாந்த்,  முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியம் பாஸ்கரன், ஆலய தர்மகர்த்தா சின்னத்தம்பி சிவகுமார், மயில்வாகனம் யோகேஸ்வரி, செல்லத் தம்பி புவனேந்திரன், கமலநாதன் கேதுஜன் ஆகியோர் ஒப்மமிட்டுள்ளனர்.

 மேலதிக வேட்பாளர்களாக சதாசிவம் சசிக்குமார், க.லோகநாதன்,  த.அமலா, க.நளாயினி, வி.சுதர்ஜினி, வ.சிவகரன், கி.கியோகிருஷ்ணா ஆகியோர் குறிப்பிடப் பட்டுள்ளனர்.