கல்முனை சிவன் ஆலயம் அருகில் உள்ள சந்தாங்கேணி மைதானத்தை பார்வையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம்
கல்முனை சந்தாங்கேணி மைதானத்தின் இவ்வாண்டின் 150 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து, அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதனை மேற்பார்வை செய்வதற்கு இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமல் பெர்னாண்டோ PhD, பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா உடன் விஜயம் மேற்கொண்ட அதேவேளை, சாய்ந்தமருது பொலிவேரியன் மைதானம் உட்பட பௌசி மைதான நிலமைகளையும் (23) நேரில் சென்று பார்வையிட்டார்.








