கல்முனை பிராந்திய மின்சார சபையின் கவனத்திற்கு!
-பிரபா-
பெரியநீலாவணை – 01B, சுனாமி தொடர் மாடி பிரதேசத்தில் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்சார கம்பிகளின் ஊடே மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. மழை பெய்யும் நேரங்களிலும், பலமான காற்று வீசும் நேரங்களிலும் மின்சார கம்பிகள் இடையே உரசல் ஏற்பட்டு பற்றி எரிவதாகவும், இதனால் ஆபத்துக்கள் ஏற்படலாம் என மக்கள் அச்சம் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
மக்கள் செறிந்து வாழும் பகுதி என்பதால் இது விடயமாக கவனம் எடுத்து மின்சார கம்பிகளை தொட்டு வளர்ந்து நிற்கின்ற மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.




