பிரித்தானியாவால் கருணா அம்மான் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு இன்று தடை விதிப்பு!
இலங்கையில் உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான நபர்களுக்கு இங்கிலாந்து இன்று தடை விதித்துள்ளது.
உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக கருதப்படும் இலங்கையின் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயல்பட்ட துணை இராணுவப் படையான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குழுவைத் தலைமை தாங்கிய முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவத் தளபதி ஆகியோர் இன்று இங்கிலாந்தால் தடைசெய்யப்பட்ட நபர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூர்யா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
