இன்று உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து விழிப்புணர்வு நடைபவணி ஒன்றினை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வானது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ந. ரமேஷ் அவர்களும் பங்குபற்றி சிறப்பித்தார்.

இந்நிகழ்வின் போது விழிப்புணர்வு நடைபவணி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை முன்றலில் இருந்து ஆரம்பித்து பிரதான வீதி ஊடாக கல்முனை பொதுச் சந்தையை அடைந்து அங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம் பெற்றன.

மீண்டும் பஸ் தரிப்பிடம், மட்டக்களப்பு பிரதான வீதியினூடாக வைத்தியசாலையை வந்தடைந்தது. மேலும் இன்றைய தினம் வைத்தியசாலையில் பாதுகாப்பாக சளி சேகரிப்பதற்கான booth பயனாளிகளுக்காக திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை வடக்கு ஆதரவைத்திய சாலையின் வெளி நோயாளர் பிரிவில் காசநோய்க்கான சளி பரிசோதனை 2% மாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும். இந்நிகழ்வின் போது வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், நிர்வாக கிளையினர், சுகாதார உதவியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு ஊழியர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.