( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தலைவர் மருத்துவர் றிஷான் ஜெமீல் ஏற்பாட்டில், வருடாந்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது கிளைவைத்தியசாலையில் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது .
இந் நிகழ்வு வைத்தியசாலையின் மருத்துவ பணிப்பாளர் மருத்துவர் எம்.ஜே.சட்.எம்.ஜலால்டீன் தலைமையில் நடைபெற்றது .
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர் மற்றும் ஏ. ஆதம்பாவா ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தார்கள் .
வரவேற்புரையை டாக்டர் ஜெமில் சம்மாந்துறை வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் எம்.கலாமுடீன் வரவேற்புரை நிகழ்த்த, வைத்தியசாலையின் நிர்வாகி ஹில்டன் ரியாஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.
பெருந்தொகையான தமிழ் முஸ்லிம் சிங்கள டாக்டர்கள் ஊடகவியலாளர்கள் தொழிலதிபர்கள் என பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
கிழக்கு மாகாணத்தில் ஐஎஸ்ஓ ISO 9001 சான்றிதழ் பெற்ற, நவீன ஆய்வுக்கூடமுள்ள ஒரேயொரு தனியார் வைத்தியசாலையாக டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டதையொட்டி, அதனை மக்களுக்கு அறிவித்து பிரகடனப்படுத்தும் நிகழ்வு முன்னதாக இடம் பெற்றது .
அது தொடர்பான காணொளி காண்பிக்கப்பட்டதுடன், டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நவீன ஆய்வுகூடப் பணிப்பாளர் டாக்டர்.ஆகிவ் அதற்கான பூரண விளக்கத்தை வழங்கினார்.
சர்வதேச தரத்திலான சுமார் 1000 பரிசோதனைகள் இங்கே சேவையாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.










