மட்டக்களப்பில் எவ்வாறு 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? இதோ விபரம்!
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இது எவ்விதம் நிராகரிக்கப்பட்டது என்பது தொடர்பான விளக்கம் இங்கு தரப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
கட்டுப்பணம் செலுத்திய கட்சிகள்/சுயேட்சைகுழுக்கள்: 139. ஆனால் வேட்பு மனுக்கள் 118 தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள்:101.
நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்:17 ஆகும்.
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் உள்ளூராட்சி சபைகள் வாரியாக தரப்படுகிறது.
மட்டக்களப்பு மாநகரசபை:
1. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
2. ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி.
3. பொதுஜன ஐக்கியமுன்னணி.
4. ஐக்கியதேசியகட்சி.
(ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு வேட்பாளர் பெயர் தர்சிக்கா)
•மண்முனைப்பற்று ஆரையம்பதி பி.தே.சபை:
5. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
6. ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி.
7. சோ.மகேந்திரன் சுயேட்சை குழு.
8. சி.கிஜானன் சுயேட்சை குழு.
9. செ.தங்கவேல் சுயேட்சை குழு.
( சுரேந்திரன் சுயேட்சை குழுவில் மூவரின் பெயர் திலகவதி, திவாகர், பவளக்கொடி)
•கோறளைப்பற்று வாழைச்சேனை பி. ச: 10. வி.லவக்குமார் சுயேட்சை குழு.
11. கு.விமலேந்திரன் சுயேட்சை குழு.
(தனிவேட்பாளர் தேசியமக்கள் சக்தி செ.விமல்ராஜ்)
•கோறளைப்பற்று வடக்கு வாகரை பி.ச:
12. சர்வசன அதிகாரம்.
13. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.
•மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பி.ச:
14. ஐக்கிய மக்கள் சக்தி.
•போரதீவுபற்று வெல்லாவெளி பி. ச.
15. ஐக்கிய மக்கள் சக்தி
(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ இரு வேட்பாளர்கள் ஒளிர்வளவன், சப்தஸ்வரன்)
•ஏறாவூர் பற்று செங்கலடி பி.ச:
16. விஜயகுமார் சுயேட்சை குழு.
(ஐக்கிய மக்கள் சக்தி -ஒரு வேட்பாளர் பெயர்)
•காத்தான்குடி நகரசபை
17. சர்வசன அதிகாரக்கட்சி.
மட்டக்களப்பில் வாக்களிக்க தகைமை பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 455520.
பிரதேசபைகள்:09,நகரசபைகள்:02,
மாநகரசபை:1
மொத்தமாக 12 உள்ளூராட்சி சபைகள் உள்ளன.
மொத்த வட்டாரங்கள்:144.
தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள்:444.
தெரிவு செய்யப்படும் மொத்த உறுப்பினர்கள்:274 ஆகும்.
அதில் வட்டார ரீதியாக:146.
பட்டியல் ரீதியாக:128 என்பது குறிப்பிடத்தக்கது.