-எஸ்.கார்த்திகேசு)
கிழக்கிலங்கை அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தம்பிலுவில் தாழையடி ஸ்ரீ சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக குடமுழுக்குத் விழா சிவாச்சாரியார்களின் வேதாகம மந்திரங்கள் ஒலிக்க அடியார்களின் அரோகரா கோசத்துடன் மிக சிறப்பாக நிகழ்வு இடம்பெற்று இருந்தது.

தம்பிலுவில் தாழையடி சிவனாலையத்தின் நிருவாக சபையினரின் ஓழுங்கமைப்பில் சிவாச்சாரியர்களால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆலயத்தில் கிரியைகள் ஆரம்பமாகி திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு பெற்று இருந்தது.

இதனைத் தொடர்ந்து புதன்கிழமை விநாயகப்பெருமான் மற்றும் மூல மூர்த்தியான சிவலிங்கேஸ்வரப் பெருமான் உள்ளீட்ட பரிபாலன மூர்த்திகளுக்கு சிவாச்சாரியர்களால் வேதாகங்கள் ஒலிக்க அடியார்களின் அரோகரா கோசத்துடன் நாதஸ்வர வாத்திங்கள் முழங்க பூரண கும்பநீரினால் விநாயகப் பெருமான் மூல மூர்த்தியான சிவலிங்கேஸ்வரப் பெருமான் மற்றும் பரிபாலன மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்று இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் ஒரு மண்டலம் பூஜை வழிபாடுகள் திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.