உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12 மணி
வரை ஏற்றுக் கொள்ளப்படும். ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை முன்வைக்க ஒன்றரை மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்த பிறகு, பேரணிகள் அல்லது வாகனப் பேரணிகளை நடத்துவது தேர்தல் சட்டத்தின் கீழ் முரணானது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.