(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு)

திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சந்திரசிகிச்சை கூடத்தை பூர்த்தி செய்ய 20இலட்சம் ரூபா நிதி வழங்கி வைப்பு

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சந்திரசிகிச்சை கூடத்தினை பூர்த்தி செய்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் தொழிலதிபரும் SSK Construction நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளருமான சுந்திரலிங்கம் சசிகுமார் அவர்கள் தனது சொந்த நிதியில் 20 இலட்சம் ரூபா நிதியினை வழங்கி வைத்துள்ளார்.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் விடுத்த கோரிக்கையினை அடுத்து இன்று வைத்திசாலைக்கு வருகை தந்து வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரடியாக பார்வையிட்டு கேட்டறிந்து கொண்டு தொழிலதிபர் சசிகுமார் உனடியான 20 இலட்சம் நிதியினை முதல் கட்டமாக வழங்கி வேலைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் வைத்தி அத்தியட்சகர் மர்சூத் அவர்களிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வருட நிறைவுக்குள் 10 மில்லியம் நிதியினை வழங்க தான் முடிவு செய்து இருப்பதாகவும் இதன் இரண்டாம் கட்டமான ஒரிரு மாதங்களில் 3மில்லியன் நிதியினை வழங்குவதாகவும் உறுதியளித்து இருந்தார்.

இந்நிகழ்வில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் அபிவிருத்திக் குழு தலைவருமான ஏ.வி. மர்சூத் அபிவிருத்திக் குழுவின் உபசெயலாளர் சஞ்சிவநாத் பொருளாளர் புவிதாசன் மற்றும் அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.