இன்று திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மகளீர் தின விழா 

( வி.ரி. சகாதேவராஜா)

திருக்கோவில் சுவாட் (SWOAD)நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் க.பிறேமலதன்  தலைமையில் இன்று 14.03.2025ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10மணியளவில் திருக்கோவில் சுவாட் நிறுவனத்தின் அலுவலக மண்டபத்தில் மிகவும்  சிறப்பான முறையில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு நடைபெற்றது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ,  சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் பிரதேசத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, திருக்கோவில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களான பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், சமூர்த்தி முகாமையாளர் அவர்களும் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரியும், சுவாட் நிறுவனத்தின் தலைவியும், ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளருமான கமலாதேவி அவர்களும், ஓய்வு நிலை கிராமசேவகர்களின் நிர்வாக உத்தியோகத்தர் கண.இராசரெட்ணம் சுவாட் நிறுவனத்தின் ஆளுனர் சபை உறுப்பினரும், ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளருமான எஸ்.ரவீந்திரன் கலந்து சிறப்பித்தனர். 

மேலும் இந்நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகளும், அதிதிகளின் உரைகளும், சுவாட் நிறுவனத்தில் அதிக சேமிப்பு பணத்தினை சேமித்த அங்கத்தவர்களையும், சிறந்த குழுத்தலைவிகளையும் கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் இந்நிகழ்விற்கு அதிதியாகவும், பிரதம அதிதியாகவும் கலந்து கொண்ட அதிதிகளை கௌரவித்து பரிசில்களும் வழங்கப்பட்டது.