அநுராதபுரம் போதனா மருத்துவமனை பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம், அநுராதபுரம் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கான விடுதியில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் கத்தி முனையில் தவறான நடத்தைக்கு  உள்ளாக்கப்பட்டிருந்தார்.

சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டிருந்ததோடு, அவரைத் தேடுவதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.