‘அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்.’இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்ஆனந்த விஜேபால தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில்
சேவையில் இருந்த பெண் வைத்தியர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்றுகேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கை
யிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார .

வைத்தியரின் அடையாளத்தைப் பாதுகாத்து பொறுப்புடன் செய்திகளை வெளி
யிடுமாறு அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம் என்றும், மேலும் சம்பவம்குறித்த தகவல்களை வெளியிடும் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப்பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் – சுதந்திர ஊடக இயக்கம்