மண்டானையில் சுயதொழில் உற்பத்தி பயிற்சி நெறி பூர்த்தி!

 தரமான விளக்குமாறு விற்பனை!

( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ASK திருவதிகை கலைக் கூடத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சுயதொழில் பயிற்சி நெறியின் பூர்த்தி இறுதி நாள் சான்றிதழ்  மற்றும் தொழில் உபகரணப் பொதிகள் வழங்குதல்  மற்றும் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் என்பன நேற்று முன்தினம் காயத்திரி கிராமம் மண்டானை திருக்கோவில் 04 ல் பூமகள் கட்டடத்தில்  மிக சிறப்பாக இடம் பெற்றது.

கனடா சீடர்ஸ் அமைப்பின் நிதி அனுசரணையில் திருக்கோவில் பிரதேச செயலாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் we can மற்றும் உதவிய ஒளி மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் வளவாளர்களின் நெறிப்படுத்தலின் ஊடாக இப் பயிற்சி நெறி முன்னெடுக்கப்பட்டது.

திருவதிகை கலைக் கூட முக்கியஸ்தர் சு.கார்த்திகேசுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக  திருக்கோவில் பிரதேச செயலாளர்  தங்கையா கஜேந்திரன் , கௌரவ அதிதியாக  தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்  கலாநிதி எஸ். குணபாலன்  சிறப்பு அதிதிகளாக we can தலைவர்  இ. சிவானந்தரசா  உதய ஒளி அமைப்பின் தலைவர் கே. குபேரன் வளவாளர் திருமதி. ராஜன் தேவகி கிராம அலுவலர் ரி.சுதர்சன், ரி. முரளிதரன் திருவதிகை நிருவாகக் உறுப்பினர்கள் நிருவாகிகள்,பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

பயிற்சி நெறியில் பங்கேற்க மகளிருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பயிற்சி நெறியில் உற்பத்தி செய்யப்பட்ட தரமான விளக்குமாறு விற்பனை செய்யப்பட்டது.