துறைநீலாவணையில் சாதனையாளர் பாராட்டு விழா  – 07.03.2025

செல்லையா-பேரின்பராசா 

பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள மட் /பட் / துறைநீலாவணை  சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா இப் பாடசாலை அதிபர் ஆர்.  கருணா தலைமையில் 07.03.2025 மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் விழாவில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் பிரதம அதிதியாகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பு.திவிதரன் சிறப்பு அதிதியாகவும் ஆசிரிய ஆலோசகர் ஆ.ரவிச்சந்திரன் கிராம சேவை உத்தியோகத்தர் சி.லவகீதன் ஆகியோர்  விசேட அதிதிகளாகவும்  கலந்து சிறப்பித்தனர்

இந் நிகழ்வில் கலைத் திட்டம் இணைக் கலைத் திட்டம் என்பவற்றில் சாதனைபடைத்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள் பாராட்டுப் பத்திரம் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்  இம் மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியைகளான திருமதி கலையரசி அமிர்தநாயகம் திருமதி கிரிதா லிங்கநாதன் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர் இ.அனோஜன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வின் பிரதம அதிதியான வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரனுக்கு துறைநீலாவணை கிராம மக்கள் சார்பில் ஓய்வு நிலை அதிபரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான செல்லையா-பேரின்பராசா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.