கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடத்திய. தேசிய மகளிர் தின நிகழ்வு. 2025.

-பிரபா –

மார்ச் 08ம் திகதி ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினம் உலகளாவிய ரீதியிலே, பெண்களின் சாதனைகளையும், பாலின சமத்துவத்திற்கான ஆதரவாளர்களையும் கௌரவிக்கும் முகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


அந்த வகையில் 2025 மார்ச் 08 இன்றைய தினம் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் சிறப்பு பட்டிமன்ற த்துடன் சிறப்பு நிகழ்வை இன்று நடாத்தியது.

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு. எஸ். நவநீதன் தலைமையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் அரங்கில் நிகழ்வு நடைபெற்றது.
இன் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.றுhபி வலன்ரினா பிரான்சிஸ் அவர்களும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், மற்றும் களவாஞ்சிகுடி பொலீஸ் பொறுப்பதிகாரி, உட்பட பலரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


நிகழ்விலே தொடர்ந்து சிறப்புரைகள் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து
தன் வாழ்நாளிலேயே ஏற்பட்ட இடர்களை துணிவுடன் எதிர்கொண்டு, துறை சார் வாண்மையை மேலும் முன்னோக்கி நகர்த்தி, அத்துறையில் தன் திறமைகளை வெளிப்படுத்தியதுடன், சமூகத்துக்கும், எதிர்கால சந்ததியினருக்கும், முன்மாதிரியாக திகழ்ந்தமைக்காக “மாண்புறு மகளிர்” என கௌரவப்படுத்தி கிழக்கின் கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மமகளிர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. பெண்களுக்கான உரிமைகள் மற்றும், சுதந்திரம், அவர்களால் சரியாக பயன்படுத்தப்படுகின்றது/ பயன்படுத்தப்படவில்லை. என்ற தலைப்புகளில் இரண்டு குழுவினர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
சரியாக பயன்படுத்தப்படுகின்றது என்று தலைப்பிலே திருமதி. சிவப்பிரியா வில்வரத்தினம் (பிரதேச செயலாளர் மண்முனை வடக்கு) திருமதி. ஜெயந்திமாலா பிரியதர்ஷன். ( பிரதி கல்வி பணிப்பாளர் அம்பாறை) ஜனாப் Y. ராசித் (உப பிரதேச செயலாளர் அக்கரைப்பற்று) ஆகியோரும்.
சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற தலைப்பிலேயே திரு. U. உதயஸ்ரீதர் (களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் ,திரு.T.J. அதிசயராஜ் பிரதேச செயலாளர் கல்முனை வடக்கு, ஜனாபா நஹிதா முசாபீர் (உதவி பிரதேச செயலாளர் அட்டாளச்சேனை) ஆகியோரும் கலந்து கொண்டு மகளிர் தின பட்டிமன்றத்தினை சிறப்பித்திருந்தனர்.