1400 பில்லியன் மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை 3 வீதம் – 4 வீதமாக அதிகரிக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் பொருளாதாரத்தை, கிராமத்தை நோக்கி நகர்த்தும் போது தற்போது உள்ள பொருளாதார வாய்ப்புக்களை பலப்படுத்த முடியுமென தெரிவித்த ஜனாதிபதி,
புதிய வாய்ப்புக்களை அறிந்துகொள்வதற்கான அவசியத்தையும் தெளிவுபடுத்தினார்.


இதன்போது மாவட்டங்களுக்கு அமைவான பிரச்சினைகள் குறித்து அரசாங்க அதிபர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததுடன், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவுகள் தொடர்பிலும் கலந்து
ரையாடப்பட்டது.


அரச நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அரச நிருவாக அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார மற்றும்
மாவட்டச் செயலாளர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர் என என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது