தாதியர்கள் கல்முனை நிந்தவூர்  அக்கரைப்பற்று சம்மாந்துறை  ஆதார வைத்தியசாலைகளில்  போராட்டம்

பாறுக் ஷிஹான்

அம்பாறை  மாவட்டத்தில் உள்ள தாதியர்கள் கல்முனை நிந்தவூர்  அக்கரைப்பற்று சம்மாந்துறை  ஆதார வைத்தியசாலைகளின் முன்பாக ஒன்று கூடி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்திருந்தது.

இதற்கமைய   நோயாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி கல்முனை நிந்தவூர்  அக்கரைப்பற்று சம்மாந்துறை  ஆதார வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சில தாதியர்கள்  எதிர்ப்பினை முன்னெடுத்ததை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை குறித்த போராட்டமானது வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது எனவும் இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.