பாண்டிருப்பு சிவனாலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு!
பாண்டிருப்பு சிவனாலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வு நேற்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. அதிகளவான பக்தர்கள் ஆலயத்திற்கு சென்று நேற்று அதிகாலை முதல் மாலைவரை சமூத்திரத்தில் நீர் எடுத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தனர்.
விஷேட பூசை வழிபாடுகளுடன் நேற்று இரவு ஆலய நிருவாகததின் ஏற்பாட்டில் ஆலய தலைவர் மோகன்ராஜ் ( ராயு) கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.
இதில் பாண்டிருப்பு சிவ தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட சமயபாட பரீட்சையில் அதிக புள்ளிகளைப்பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் , மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
இந் நிகழ்வுக்கு கல்முனை வடக்கு பிரதச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் , ஆலய பிரதம குரு ,பெரியநீலாவணை பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் ஆசிரிய ஆலோசகர் M.லக்குணம் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.







