சமுர்த்தி ரன் விமன வீடமைப்பு திட்டம்; பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு!

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி ரண் விமன வீடமைப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகள் நேற்று (25) பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் திரு.ரீ.ஜே.அதிசயராஜ் அவர்களது தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி தலமைப்பீட முகாமையாளர் திரு.வீ.சிறிநாதன், முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாப்.ஏ.எல்.எம்.நஜீப் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பெரியநீலாவணை 2 மற்றும் பாண்டிருப்பு 1ஏ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள இரண்டு பயனாளிகளுக்கு இந்த வீடுகள் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.