கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பிரியாவிடை நிகழ்வும், வரவேற்பு நிகழ்வும், வைத்தியசாலை அபிவிருத்திகுழுவின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்றது.


இந் நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிப்பாளர்களாக பணிபுரிந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன், மற்றும் பணிப்பாளர் A.P.R.S சந்திரசேன ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வாகவும், புதிதாக பணிப்பாளராக கடமையேற்றுள்ள வைத்தியகலாநிதி கு.சுகுணன் அவர்களுக்கு வரவேற்பளிப்பதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.


வைத்தியசாலை அபிவிருத்தி குழு தலைவர் சோமசுந்தரம் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில், வரவேற்பு நடனத்தை லோஜிதா கமலநாதன் அவர்களும், கவிதை ஜெனிதா மோகன் அவர்ளாலும், கலாபூசணம் லோகநாதன் அவர்களால் பாடல் உட்பட பல கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. வரவேற்புரையை அபிவிருத்தி குழு செயலாளர் கா.சந்திரலிங்கம் நிகழ்த்தினார். இந் நிகழ்வின் கதாநாயகர்களால் ஏற்புரைகளும் மேலும் ஏ பிரபாகரன், பிரதிப்பணிப்பாளர்வைத்தியர் தாஹிரா, வைத்தியர் சா.இராஜேந்திரா ஆகியோரின் வாழ்த்துரைகளும் இடம் பெற்றன.


இந் நிகழ்வுக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஏனைய ஊழியர்கள், அபிவிருத்திகுழு பொருளார் எஸ்.தவராசா உட்பட அபிவிருத்திகுழு உறுப்பினர்கள், வைத்தியசாலை நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.