திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு வன்னி ஹோப் பெரும் உதவி !
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு வன்னி ஹோப்( Vanni Hope) என்ற நிறுவனம் பெருந்தொகையான வைத்திய உபகரணங்களை நேற்று முன்தினம் வழங்கி வைத்தது.
சுமார் 30 லட்சம் ரூபாய் பெறுமதியான 21 வகையான மருத்துவ உபகரணங்களை அங்கு வைத்திய அத்தியட்சகர் மருத்துவர் ஏ .பி .மசூத் அவர்களிடம், வன்னி ஹோப் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சன் சிவஞானசுந்தரம் வழங்கி வைத்தார்.
அத்தருணம், வன்னி ஹோப் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே தர்மராஜா மற்றும் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
‘Vanni Hope’ நிறுவனத்தினர் தாம் வழங்கிய வாக்குறுதிக்கிணங்க ஒரு தொகை வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைத்தமைக்கு
வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கம் ,வைத்தியசாலை அபிவிருத்தி குழு சார்பிலும் பிரதேச மக்கள் சார்பிலும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
Vanni Hope நிறுவனத்தினர் இன்னும் பல உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.









