சர்வதேச தாய்மொழி தின கட்டுரை போட்டியில் துறைநீலாவணை ம.வி மூன்றாமிடம்.

(கலைஞர்.ஏ.ஓ.அனல்)
சர்வதேச தாய்மொழி தினத்தினை முன்னிட்டு பங்களாதேஷ் நாட்டின் இலங்கைக்கான தூதுவராலயம் நடாத்திய தமிழ் மொழிப்பிரிவுக்கான கட்டுரைப்போட்டியில் தேசிய ரீதியில் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தை சேர்ந்த சாந்தகுமார் சனுவி மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.

இலங்கைக்கான பங்களாதேஷ் நாட்டின் தூதுவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசில்களை வழங்கி வைத்து உரையும் நிகழ்த்தினார்.

இம்மாணவிக்கான ஆலோசனை வழிகாட்டல்களை தமிழ் பாடத்துறை சிரேஷ்ட ஆசிரியர்களான எஸ்.சிறிதரன் மற்றும் த.சுமங்களா வழங்கி வைத்தனர்.

இன்று (21.02) வெள்ளிக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சர்வதேச தாய்மொழி தின வைபவத்தில் பல்லின, கலை, கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.