பாதாள உலகக் குழுக்களுக்கு முழுமையாக முடிவு கட்டப்படும்!

‘பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில
நபர்கள் வரையில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் விரிவடைந்திருக்கின்றன. இது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகக் குழுக்களை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதற்காகச் சிறிது காலம் எடுக்கும்.’இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின்
முதலாவது கூட்டம் அவருடைய தலைமையில் நேற்று நாடாளுமன்றத்தில்
நடைபெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.