நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் புதிய அதிகாரி வருகையின் பின் மத வழிபாட்டுக்கு இடையூரா ?

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வளாகத்தில் உள்ள வேம்பு மரத்தடியில் பிள்ளையார் சிலை ஒன்று அமைந்துள்ளது. இதனை ஊழியர்களும், அலுவலகத்திற்குவரும் சேவைநாடிகளும் வழிபடுகின்றமை வழமை. இந் நிலையில் அண்மையில் புதிய சுகாதார வைத்திய அதிகாரி கடமையேற்ற பின்னர் குறித்த வேம்பு மரம் வெட்டப்பட்டுள்ளதால் அங்கு ஒரு சலசலப்பு ஏற்பட்டிருந்ததாக அறிய முடிகிறது. இச்சம்பவம் இப்பிரதேச மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு அலுவலகத்திற்கு கடமையேற்கும் உயரதிகாரி எந்த மதமாக இருந்தாலும் அங்கு உள்ள ஊழியர்களின் மத கடமைகளுக்கு இடையூராக இருக்க கூடாது இது இன நல்லுறவை உருவாக்கும் இந்த அரசாங்கத்தின் முயற்சிக்கு குந்தகம் ஏற்படுத்தும். ஆகவே இந்த விடயம் தொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி குறித்த விடயம் தொடர்பாக ஆராய வேண்டும்.