யானையின் தாக்குதலில்
சாலிய ரத்நாயக்க பலி. (முன்னாள் மொரவெவ பிரதேச சபை உப தவிசாளர்)
மொரவெவ சந்தியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த யானையை துரத்தியபோது யானை தாக்கியதில் உயிரிழந்ததாக தெரிய வருகின்றது. இச் சம்பவம் இன்று (19.02.2025) இரவு சுமார் 8.45 அணியளவில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த நபர் உதவி செய்யும் மனப்பாங்கு மிக்க நல்ல உள்ளம் படைத்தவர் எனவும் அங்கிருக்கின்ற தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்
மனிதர்களுக்கும் – யானைகளுக்கும் இடையிலான மோதலை தவிர்க்கும் விதமான திட்டங்களை அரசு முன்னெடுத்து அநியாயமான உயிரிழப்புகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
