கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு :ஒருவர் உயிரிழப்பு-வழக்கறிஞர் வேடமணிந்து வந்த ஒருவரால் துப்பாக்கி பிரயோகம்
புதுக்கடை (Aluthkade) நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான “கணேமுல்ல சஞ்சீவா” சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
வழக்கறிஞர் வேடமணிந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான “கணேமுல்ல சஞ்சீவ” எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர், வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
