வி.சுகிர்தகுமார்
மனிதவலு வேலைவாய்ப்புத்திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த தொழில் சந்தை 2025 இன் நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் (18) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் மனிதவள அபிவிருத்தி உத்;தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ்தீன் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற நிகழ்வில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மாவட்;ட செயலக இணைப்பாளர் என்.அருளானந்தம் மற்றும் பிரதேச செயலக தலைமைப்பீட முகாமையாளர் கே.நேசராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொழில்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் வழங்கும் நிறுவனங்களுடன் தொழில் தேடுநர்களை இணைக்கும் ஒரு பாலமாக இந்நிகழ்வு நடைபெற்றதுடன் தொழில் சந்தையில் 20 துறைசார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொழில் வெற்றிடங்கள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
இதேநேரம் 25 வயதிற்கு மேற்பட்டோருக்கான இலவச மருத்தவ பரிசோதனையினை தாதியர் உதவியாளர் பயிற்சி நெறியை வழங்கிவரும் ஐ என் பி எஸ் கல்லூரி நடாத்தியதுடன் தொழில் முயற்சியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்கள் பயன்படுத்தக்கூடிய நவீன தொழில் நுட்ப உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இத்தொழில் சந்தையில் பெருந்திரளான தொழில் தேடுநர்களான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்ளை சமர்ப்பித்துள்ளதுடன் நன்மையடைந்தனர்.