பெரியநீலாவணை நெக்ஸ்ட் டெப் சமூக அமைப்பின் பிரதான ஆலோசகரும், அம்பாறை மாவட்ட குடிசார் அமைப்புக்களின் தலைவரும், அம்பாறை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட கல்வித்துறைசார் ஆலோசகருமாகிய கண. வரதராஜன், அகில இலங்கை சமாதான நீதவானுமான திரு கண. வரதராஜன் (ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர்) அவர்கள் இந்தியாவுக்கான சுற்று பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து பத்து நாட்கள் இந்தியாவின் ஐந்து மாநிலங்களுக்கு செல்லும் அவர் அங்கு உள்ள பல்கலைக்கழகங்கள், ஆன்மீக நிலையங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் என்பனவற்றுக்கு சென்று விசேட கருத்தரங்குகள்,ஆன்மீக முகாம்கள், போன்றவற்றிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
