பெரிய நீலாவணையில் மதுபானசாலைகளுக்கு எதிராக 10 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது!

பெரிய நீலாவணை மக்களினால் அங்கு உள்ள மதுபானசாலைகளை அகற்ற கோர போராட்டம் இன்று  17  ஆம்  திகதியும் 10 ஆவது நாளாக தொடர்கிறது.


நேற்றைய தினம் பெருமளவான மக்கள் கூடி பேரணியையும் நடாத்தி இருந்தனர். அமைதியில்லா நிலைமையினை கருதி பெரிய நீலாவனையில் உள்ள மதுபானசாலைகளை  தற்காலிகமாக மூட பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்து இருந்தார். இதற்கு முன்னரும் மக்கள் எதிர்ப்பை உரிய இடங்களுக்கு அறிவித்து புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை தனது அதிகார வரையறைக்குட்பட்டு தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்து இருந்தார்.  குறித்த மதுபானசாலை மீளவும் கடந்தவாரம் திறக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் போராட்டம் பத்து நாட்களாக தொடர்கிறது. மதுபானசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பும் தொடர்கிறது .

மதுபான சாலைக்கு எதிரான போராட்டம் கடந்த ஆண்டு (செப்டெம்பர்) ஒன்பதாம் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது…தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது நான்காம் கட்ட போராட்டத்தின் சுழற்சி முறையின் பத்தாம் நாளாகும்
இதற்கு தீர்வை பெற்று கொடுப்பது யார்?