நாவிதன்வெளி பிரதேச கலாசார இலக்கிய விழா

(ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ், முஜிப் சத்தார்) 

கலாசார அலுவல்கள் திணைக்களம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தோடு இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய பிரதேச இலக்கிய விழா,  நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில்  நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் நேற்று மாலை (15.02.2025) நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.ஷினாஸ் ஒருங்கிணைப்போடு நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிரதேச மட்ட இலக்கியப் போட்டியில்  வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், மற்றும் பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.

தமிழ் – முஸ்லிம் கலாசார பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த கலாசார இலக்கிய விழாவில் பிரதேச மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு சுபதம் விருது வழங்கிய பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நிகழ்வுகளில் பங்குகொண்ட மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.

இதில் சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.ஏ.கபூர் உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராசா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம். றின்சான், சொறிக் கல்முனை ஹோலிகுரோஸ் திருத்தலத்தின் அருட்தந்தை ஜீ.சுலக்சன், சமூக சேவையாளர் கே.புவனரூபன் உட்பட பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், இலக்கிய அதிதிகள், என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இலக்கிய அதிதியாக எழுத்தாளரும் ஆசிரியருமான திருமதி ஏ.ஆர்.பாத்திமா சூபா கலந்து கொண்டார்.