( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான கல்முனை வலயத்தில் உள்ள பாடசாலைகளில் 09 பாடசாலைகளின் பங்குபற்றலுடன் நடைபெறுகின்ற மூன்று நாள் சாரணர் பயிற்சி முகாமின் இரண்டாம் நாளின்(15/02/2025) இரவு நேர நிகழ்வான Scout Fire Camp நிகழ்வு அன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் கலந்து சிறப்பித்தார் .
சாரணர் தீயணைப்பு முகாமில்
மாணவர்களும் தத்தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.









