சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு நிகழ்வு
பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு விழா இன்று(14) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான்
ரி. கருணாகரன் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி கலந்து கொண்டார்.
மேலும் கௌரவ அதிதிகளாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் மேலதிக செயலாளர் (பொறியியல்) பொறியியலாளர் எஸ். ஏ. கே.சுபசிங்க ,விசேட அதிதிகளாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் பணிப்பாளர்( பொறியியல்) பொறியியலாளர் பி.எஸ்.சி.கே. முணசிங்க,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா,நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரி.சஞ்ஞீவன்,விசேட அதிதிகளாக மேல் நீதிமன்ற பதிவாளர் எஸ்.எச்.எஸ். ஹக்கீமுள்ளாஹ்,மேல் நீதிமன்ற வலயக் கணக்காளர் ஏ.எல் நஜிமுடீன்,மேல் நீதிமன்ற தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் றிப்கான் மற்றும் சட்டத்தரணிகள் பலரும் கலந்து கொண்டனர்.



















