கல்முனை குருந்தையடி வீட்டுத் திட்டத்தில் நீர் சில தினங்களாக தடைப்பட்டிருந்ததால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர் கொண்டிருந்தனர்.

மக்களின் அவலம் குறித்து கல்முனை நெற்றில் செய்தி வெளியிடப்பட்ட தகவலின் பிரகாரம் நீர் வழங்கல் தற்காலிக சுமூக நிலைக்கு வந்ததுடன், நிரந்தர தீர்வு ஒன்றை பெறுவதற்கான வழிமுறைகளை நீர் வழங்கல் அதிகார சபையின் பொறியியலாளர் குழுவினர் நேரடியாக வந்து பார்வையிட்டு சென்றது இதுவே முதல்தடவையாகும் , தற்காலிக தீர்வு, நிரந்தர தீர்வுக்கான திட்டங்களுக்கும், நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கறைக்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றியையும்   தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி