வி.சுகிர்தகுமார்      

 அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் படைப்பிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட க.பொ.சா.தர பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச கணிதபாட கல்விக்கருத்தரங்கு நேற்று (15) நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட       06 பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் காலாட் படைப்பிவின் கட்;டளை அதிகாரி கேணல் சுகத் திசாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற கருத்தரங்கில் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளரும் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான க.கமலமோகனதாசன் இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர் சஜீவ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் வளவாளர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து கருத்தரங்கினை ஏற்பாடு செய்த இராணுவத்தினரின் பணிக்கு கல்விச்சமூகம் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன் இங்கு தெரிவித்ததுடன் மாணவர்கள் இதனை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டு கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார்.
காலை முதல் ஆரம்பமான கருத்தரங்கின் வளவாளர்களாக ஆசியர் வாசவன் மற்றும் சர்மிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.