கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் இன்று முன்னெடுப்பு.!

ஜனாதிபதி செயலகத்தின் “கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக “அழகான கடற்கரை” எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட. பெரியநீலாவணை,பாண்டிருப்பு,கல்முனை கிராமங்களின் கடற்கரை பிரதேசங்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை (2025.02.16) முன்னெடுக்கப்படவுள்ளது.

காலை 06.30 மணி தொடக்கம் முற்பகல் 08.30 மணி வரை 03 கடற்கரை பிரதேசங்களில் இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒழுங்குகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.அதிசயராஜ் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வேலைத் திட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் பங்குபற்றவுள்ளனர்.