மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நிதாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மற்றும் கௌரவ அதிதியாக வலயத்தின் கல்விப்பணிப்பாளர் திருமதி. எஸ்.ரவிராஜா மற்றும் விஷேட விருந்தினர்களாக திருமதி.என். மகேந்திரகுமார், பிரதி கல்வி பணிப்பாளர்.ஹரிகராஜ், திருமதி சந்திரவதனி சிவகுமார் (பழைய மாணவி வட அமெரிக்கா) ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந் நிகழ்வின் போது கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள், உயர் தரத்தில் சித்தி அடைந்து பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகிய மாணவர்கள், சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும்
இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் பல்வேறு சாதனைகள் படைத்த மாணவர்கள் ஆகியோர் அதிதிகளால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இந்நிகழ்வினை அலங்கரித்ததுடன், பிரதம அதிதியாக கலந்துகொண்ட வலயத்தின் கல்விப்பணிப்பாளரிற்கு
இதன்போது பாடசாலை நிருவாகத்தினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.