பெடோ அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (12) கமு விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இதற்கு நிதிப்பங்களிப்பு செய்த லண்டனில் வசிக்கும் பூவீந்திராஜா,லண்டனில் வசிக்கும் HS கென்றக்சன் காட்வெயார் பெமிளி பிரதீபன்,கட்டாரில் தொழில்புரியும் சிவா,தெய்வீகன் ஆசிரியர்,டிறோ பேக்கரி உரிமையாளர் ஜெகன்,SR ஜுவலரி உரிமையாளர் சசிந்திரராஜா ,செல்வ சுந்தரம் டினேஷ்(KSA) ஆகியோருக்கு இந்த அமைப்பு சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

இந் நிகழ்வுக்கு அதிதிகளாக சமூக சேவையாளர் பிரதீபன் ,காணிப்பிரிவு பொறுப்பாளரான கிருபாகரன், கார்த்திக்(,கிராம சேவையாளர்) தனுசாந் (கிராம சேவையாளர) ,உதவும் பொற்கரங்கள் அமைப்பு கனடா விசு கணபதிப்பிள்ளை சார்பாக திருமதி கனகசுந்தரம் ஜெயந்தி,HS கென்றக்சன் காட்வெயார் உரிமையாளரான ஓய்வு பெற்ற கிராம சேவகர் கோபாலரெட்டணம் ,பெடோ அமைப்பின் தலைவர் கமலதாசன் ஆசிரியர் ஆகியோர் பங்குபற்றி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.