கிழக்கு மாகாண பதில் பிரதிப் பிரதம செயலாளராக மூ.கோபாலரத்தினம் கடமைஏற்பு!
(வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண பதில் பிரதிப் பிரதம செயலாளராக(personal and training) மூ.கோபாலரத்தினம்(மூகோ) (11) செவ்வாய்க்கிழமை கடமையை பொறுப்பேற்றார் .
அச் சமயம் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்( நிருவாகம்) என்.வில்வரெத்தினம் மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் லியாக்கத் அலி உள்ளிட்ட பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர இந்த நியமனத்தை நேற்று வழங்கியிருந்தார்.
இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியான இவர், தற்போது கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளராக கடமை புரிந்துவருகின்றார்.
அதற்கு மேலதிகமாக இப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதற்குமுன்னர் திறைசேரி முகாமைத்துவ திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக. சேவையாற்றியிருந்தார்.




