கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு நாளை (10) ஆம் திகதி நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுக்கான கிரியைகள் (9) இன்று ஆரம்பமாகியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் வேண்டுதல்களை ஏற்றி அருள் பாலித்த சித்தி விநாயகர் பெருமாளின் ஆலயம், புதுப்பொலிவு பெற, புணருத்தாரன பணிகள் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் (ஆலய கௌரவ தலைவர்) அவர்களின் தலைமையில் நடைபெற அருள் கூடியுள்ளது.
ஆலய பிரதம குரு விநாயகர் பக்தி சாகரர் சிவ ஸ்ரீ கோபால நிரோசன் ஐயா அவர்களுடன், பிரதம குருவாக சிவாகம வித்யா பூசணம் சிவாச்சாரிய திலகம் கிரியா சாகரர் பிரதிஸ்டா திலகம் ஜோதிட வித்யா தத்துவ நிதி விபூலமணி சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் அவர்களின் தலைமையில், சாதகாசிரியர் ஆரியபாஷா விற்பன்னர் சிவ ஸ்ரீ ச.மயூரவதண குழுக்கள், உதவிக்குழு சிவ ஸ்ரீ சி.முரளிதரன் ஐயா, சிவ ஸ்ரீ பவித்திரன் ஐயா, சிவ ஸ்ரீ அன்பு ஐயா ஆகியோர் கலந்துகொண்டு கிரிகைகளை சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிகழ்விற்கு அனைத்து சைவ அடியார்களையும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுவதுடன், பணிகளுக்கான பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றனர் ஆலய நிர்வாகத்தினர்.


























