பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில்  சேவைநலன் பாராட்டு – 05.02.2025.

செல்லையா-பேரின்பராசா 

கல்முனை கல்வி வலயத்திலுள்ள கமு/கமு/பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றி அரச சேவையில் இருந்து இளைப்பாறிய கணேசலிங்கம் தியாகராசாவுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும் ” தியாகசம் ” சிறப்பு மலர் வெளியீடும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இப் பாடசாலை அதிபர் தி.கண்ணபிரான் தலைமையில்  05.02.2025 ஆந் திகதி இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆ.சஞ்சீவன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு மணிவிழா நாயகன் கணேசலிங்ம் தியாகராசாவின் கனதி மிக்க கல்விப் பணி பற்றி புகழாரம் சூட்டினர்.

 இவ் விழாவில் ஆன்மீக அதிதியாக கலந்து சிறப்பித்த சிவஸ்ரீ.பி.கஜேந்திரன் குருக்கள் ஆசியுரை வழங்கினார்  மேலும் அழைப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்த ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச.சரவணமுத்து ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் க.குணசேகரம் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர்.செ.கலையரசன் ஓய்வு நிலை அதிபரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான செல்லையா-பேரின்பராசா ஆசிரிய ஆலோசகர் க.சாந்தகுமார் ஆசிரியர்களான பூ.குணசீலன் கா.நிர்மலரூபன் திருமதி சாந்தகுமாரி பரமலிங்கம் திருமதி.சுஜாழினி சஞ்ஜீவ சர்மா ஆகியோர் பல கோணங்களின் விழாநாயகனின் கல்விப்பணி பற்றி வாழ்த்துரை வழங்கினர்.

விழா நாயகன் தியாகராசாவின்  மணிவிழாவை ஆவணப்படுத்தும் வகையில் “தியாகசம்” சிறப்பு மலர் வெளியிடப் பட்டதுடன் பதினைந்துக்கும் மேற்பட்ட பொன்னாடைகள் போர்த்தப்பட்டு கவி வாழ்த்துமடல் வாசித்து கையளிக்கப்பட்டு  பொற்கிழி மற்றும் நினைவுப் பரிசில்கள் வழங்கி சிறப்பான முறையில் கௌரவிக்கப்பட்டார்.