கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம்(04) இடம் பெற்ற இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வுகள். -2025.
-பிரபா –
இலங்கையின் 77வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியிலேயே நேற்றைய தினம் சகல அரச, திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிலையங்கள் என பல்வேறு இடங்களிலும் கொண்டாடப்பட்டது.
ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கா அவர்களின் தலைமையில் இலங்கையின் தலைநகர் கொழும்பு சுதந்திர சதுக்கதில் இந்த சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டிருந்தது. அதேபோன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு T. J. அதிசயராஜ் தலைமையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்விலேயே கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, உத்தியோகத்தர்களால் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து பொங்கல் தினத்தை ஒட்டிய தான நிகழ்வுகளும் பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்திலே விசேட பூசை நிகழ்வுகளும் பொங்கல் நிகழ்வுகளும் இடம் பெற்றன.
77 வது தேசிய சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் மரநடுகையும் இடம் பெற்றதோடு,
கிழக்கு மாகாண கலாச்சார அலுவலர்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய தேசிய இலக்கிய விழா – 2024, நிகழ்வுகளில் . பங்குபற்றி போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது . கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
(படங்கள் உதவி V.கார்த்திக்)


























