கவிதை, பாடலாக்கப் போட்டிகளில் கலைஞர்.ஏ.ஓ.அனல் முதலிடம்

பொங்கல் விழாவும், பிரதேச இலக்கிய விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.T.அதிசயராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் நிர்வாக உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பிரதேச மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது திறந்த பிரிவில் கவிதை மற்றும் பாடலாக்க போட்டிகளில் கலைஞர்.ஏ.ஓ.அனல் முதலிடம் பெற்றமைக்காக பிரதேச செயலாளர் அவர்களால் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

கலைஞர்.ஏ.ஓ.அனல் 26 வருடங்களுக்கு மேலாக கலைத்துறையில் தன்னை ஈடுபடுத்திவரும் கலைஞர். இவர் மட்/பட்/துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் ஓவிய ஆசிரியராகவும், கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தில் சித்திர பாட வளவாளராகவும் கடமையாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.