பெரியநீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!
பெரியநீலாவணை கிராமத்தில் கல்வி ஊக்குவிப்பு சேவைகளை தொடர்ச்சியாக செய்து வரும் பெரியநீலாவணை ”கல்வி அபிவிருத்தி ஒன்றியம்” இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாண மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வை இன்று 04.01.2025 சிறப்பாக நடாத்தியிருந்தது.
பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் V.கமலதாசன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் விஷ்ணு மகாவித்தியாலய அதிபர் எஸ்.கோகுலராஜ் , HS காட்வெயார் அன்ட் கன்றக்சன் நிறுவனம் சார்பாக திருமதி கோபாலகிருஸ்ணன் சோதிமலர் மற்றும் அதன் உரிமையாளர் கே.கதீபன் உட்பட பல சிறப்பு அதிதிகளும் கலந்து சிறப்பிததிருந்தனர்.
இந் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.