சுதந்திர தினத்தில் கல்முனை ”தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ” அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
இலங்கை திரு நாட்டின் 77வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 04.02.2025 சிறப்பாக இடம் பெற்றது.
கல்முனை வாடிவீட்டு வீதியில் அமைந்துள்ள அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சமூகசேவை உத்தியோகத்தர் திரு.சந்திரகுமார் அவர்களும்.. சிறப்பதிதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சுதாகரன் அவர்களும் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், பெற்றார்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.