ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும் அறநெறிப்பாடசாலைகளுக்கு தடையாக இருக்கும் பிரத்தியோக வகுப்புகளை நிறுத்துதல் தொடர்பான கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு
நாடளாவிய ரீதியில் பிரதி ஞாயிற்குக்கிழமை தோறும் வாழ்வை மேன்படுத்தும்,உயர் எண்ணங்களை பதிக்கும் மேன்மையான அறநெறிக்கல்வி இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில் இவ் அறநெறிக்கல்வியினை மாணவர்கள் தடை இன்றி கற்பதற்கு சவாலாக உள்ள பிரத்தியோக வகுப்புகள், அன்றைய தினத்தில் இடம்பெறும் ஏனைய வகுப்புகளை இறுத்துவது தொடர்பாகவும்,தற்கால இளைய தலைமுறையினரின் வேறு திசையினை நோக்கிய பிறழ்வான நடத்தையில் இருந்து உயர் எண்ணங்களை தூண்டக்கூடிய அறநெறிக்கல்வியை இளவயதில் இருந்து பூரணமாக தங்குதடையின்றி பெறுவது தொடர்பாகவும் கிழக்கு மாகாண ஆளுனரின் அழைப்பின் பெயரில்
மட்,அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகஸ்தர்கள் திரு.கு.ஜெயராஜி,
திரு.கி.குணநாயகம், வளவாளர் திரு.நா.சனாதனன் ஆகியோர் கலந்துகொண்டு இதுதொடர்பான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.
அத்தோடு பிரதிஞாயிற்றுக்கிழமை தோறும் இடம்பெறும் அறநெறிக்கல்விக்கு இடையூறாக இருக்கும் தனியார் வகுப்புகளை நிறுத்துவது தொடர்பாக கல்முனை பிராந்திய அனைத்து ஆலயங்கள், விளையாட்டு இளைஞர்கழகங்களின்
கோரிக்கை கடிதமும் கெளரவ ஆளுனர் அவர்களின் கரங்களில் கையளிக்கப்பட்டது.
எனவே இவ் கோரிக்கை தொடர்பாக விரைவில் சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று ஆளுனர் நம்பிக்கையினையும் வழங்கினார்.