-பிரபா-

பெரியநீலாவணை ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


இன்றைய தினம் (02)பெரியநீலாவணையில் அண்மையில் மீனவர்களினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இரண்டரை அடி உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பெரியநீலாவணை ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரதம குரு சிவ ஸ்ரீ ந. பத்மநிலோஜன் குருக்கள் தலைமையில் பிரதிஷ்டை,மற்றும் பூசை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த வருடம் பெரிய நீலாவணையில் மீனவர்களின் வலையில் சிறிய சிவலிங்கம் ஒன்று கிடைக்கப்பெற்றது, அதனை மீனவர்கள் அனைவரும் இணைந்து ஓரிடத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் அவ்விடத்தில்
ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயம் எனும் பெயரில் சிறிய ஆலயத்தினை உருவாக்கி வழிபட்டு வந்த நிலையில் இன்றைய தினம் இரண்டு அடி உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக விடப்பட்டது.

இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் பிரதிஷ்டைக்கான கிரியை நிகழ்வுகள் யாவும் நடைபெற்று காலை 10 மணி தொடக்கம் மக்கள் நீராபிசேகம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் பூசை நிகழ்வுகளும் அன்னதான நிகழ்வுகளையும் ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து நடத்தி இருந்தனர்.